எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் 2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? அதேபோல பா.ம.க. மற்றும் இதர சிறு கட்சிகள் கூட்டணிக்கு வருமா? என்று அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "அதைப் பற்றி தற்போது சொல்ல முடியாது. நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம்" என்று கூறினார். தொடர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் வாய்ப்புகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்று அமித்ஷா கூறினார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, 'ஆம்' என பதில் அளித்தார். மேலும் தமிழ்நாட்டில் அதி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


