Idhayam Matrimony

ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      தமிழகம்
Eps 024-12-03

சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  

ராசிபுரம் நகராட்சியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால், மக்கள் குடிநீருக்காக அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள ராசிபுரம் நகராட்சி  பேருந்து நிலையத்தை தேவையில்லாமல் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணைப்பாளையம் என்ற கிராமத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  ராசிபுரம் நகராட்சி வாழ் மக்களுக்கு நாள்தோறும் முறையாக குடிநீர் வழங்காத அரசு மற்றும் நகர மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிடவும், பேருந்து நிலைய இடமாற்ற முயற்சியைக் கைவிடவும் வலியுறுத்தி, அ.தி.மு.க. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் 16.7.2025 – புதன் கிழமை காலை 10 மணியளவில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமானபி. தங்கமணி, அவர்கள் தலைமையில் ராசிபுரம் பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து