எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். ரயில் வரும்போது அவர் கேட்டை மூடவில்லை என்று கூறப்பட்டது.
இதுதொடர்பாக பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் என 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விபத்துக்கு கேட் காரணம் என்று தெரியவந்துள்ளது.
ரயில்வே கேட்டை மூடாமலேயே, கேட்டை மூடிவிட்டேன் என்று கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் விபத்து நடந்தபின்னர் பங்கஜ் சர்மாவே, ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, விபத்து நடந்துள்ளதைக் கூறியுள்ளார். மேலும் தான் கேட்டை மூடவில்லை, தவறான தகவல் அளித்துவிட்டேன் என்றும் மாஸ்டரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வேன் டிரைவர்தான் கேட்டை திறக்கச் சொன்னதாக ரயில்வே, முன்னுக்குப்பின் முரணாக அறிக்கை வெளியிட்டிருந்தது. தற்போது விசாரணையின் மூலமாக கேட் கீப்பர்தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


