எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: 4 பேருக்கு நியமன எம்.பி., பதவியை ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார். ராஜ்யசபா எம்.பி.,யாக அறிவிக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 பேருக்கு நியமன எம்.பி., பதவியை ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார். அதன் விபரம் பின்வருமாறு:
* மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கை அரசு தரப்பில் முன் நின்று நடத்திய வக்கீல் உஜ்வல் நிகம்.
* கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் சதானந்தன் மாஸ்டர்.
* முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா.
* வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய 4 பேரும் ஜனாதிபதியால் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் விரைவில் ராஜ்யசபா தலைவர் பொறுப்பு வகிக்கும் துணை ஜனாதிபதி முன்னிலையில் எம்.பியாக பதவியேற்பர்.
நியமன எம்.பி., ஆக அறிவிக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: சட்டத்துறையிலும், நமது அரசியலமைப்பிலும் உஜ்வால் நிகாமின் அர்ப்பணிப்பு முன்மாதிரியானது. அவரை ராஜ்யசபா எம்.பி.,யாக ஜனாதிபதி நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சதானந்தன் மாஸ்டர் ஜனாதிபதியால் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா ஜனாதிபதியால் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அவரது தனித்துவமான கண்ணோட்டங்கள் பார்லி., நடவடிக்கைகளை பெரிதும் வளப்படுத்தும். வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஜனாதிபதியால் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு அறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றாசிரியர் என தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளார். அவரது பார்லி., எம்.பி., பதவிக்காலத்திற்கு வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


