Idhayam Matrimony

தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      தமிழகம்
Vijay-1 2024-10-28

Source: provided

சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தவெக சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆதித்ய சோழன் தாக்கல் செய்த மனுவில், “தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தமிழகத்தின் முன்னாள், இந்நாள் எம்.பி- எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்தேன்.

மேலும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன். எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தேன். ஆனாலும், நான் கேட்ட தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை .

பொதுமக்கள் நலன் கருதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல். எனவே எனது கோரிக்கை தொடர்பான விவரங்களை வழங்க மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து