Idhayam Matrimony

நாடு முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: இந்திய தேர்தல் கமிஷன் திட்டம்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பீகாரை தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இந்த தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த நீதிபதிகள், குடியுரிமையை பரிசோதிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றையும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தனர். எனினும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், அரசியல் சாசனப்படி கட்டாயம் எனக்கூறிய நீதிபதிகள் இந்த நடவடிக்கையை தொடர அனுமதி அளித்தினர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இவ்வாறு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ள நிலையில், மேற்படி நடவடிக்கையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் நாடு முழுவதும் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இந்த வழக்கின் அடுத்த விசாரணை 28-ந் தேதி நடைபெறும் நிலையில், அதன் மீது பிறப்பிக்கப்படும் உத்தரவை பொறுத்து இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து