எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை மண்ணடி சாம்பய்யர் தெருவில் உள்ள தில்லை விநாயகர் கோவிலுக்கு வெள்ளி பூஜை பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;- இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் அதிக அளவு குடமுழுக்கு நடந்த ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. 3300-க்கு மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3500 கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அவமதிக்கப்பட்டது சமூக விரோத செயல். ஏதாவது ஒரு வகையில் வன்முறையை விதைக்க வேண்டும் என்கின்ற வகையில் நினைக்கிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ததை நாங்கள் கூட திருப்பிச் சொல்லலாம், இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். இதை மக்களை ஏமாற்றுவதற்கான சூழலாக எடுத்துக் கொள்ளலாம். ஏமாற்றுபவர்கள் தான் ஏமாற்றத்தை பற்றி பேசுவார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை வருகிற தேர்தலில் வாக்கு வங்கியால் ஏமாற்ற மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


