Idhayam Matrimony

கழிவறை பற்றாக்குறை விவகாரம்; ஐகோர்ட்களுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

புதன்கிழமை, 16 ஜூலை 2025      இந்தியா
Supreme-Court 2024-11-269

புதுடெல்லி, கழிவறை பற்றாக்குறை விவகாரத்தில் அடுத்த 8 வாரங்களில் அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுப்ரீம் கோர்ட் கடுமையாக எச்சரித்துள்ளது.

நாட்டில் பொதுமக்களுக்கு சட்ட ரீதியாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் கோர்ட்களுக்கு நாள்தோறும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் என பலர் வந்து செல்வார்கள். ஆனால், அவர்களுக்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாததுபற்றி வழக்கறிஞரான ரஜீப் கலிதா, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றி கடந்த ஜனவரி 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணை மேற்கொண்டது. அப்போது, முறையான தூய்மை என்பது அரசியல் சாசனத்தின் பிரிவு 21-ன் கீழ் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தது.

அதன் தீர்ப்பில், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக அனைத்து கோர்ட் வளாகங்களிலும் மற்றும் தீர்ப்பாயங்களிலும் கழிவறை வசதிகள் உள்ளன என உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தது. ஐகோர்ட்கள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதனை உறுதி செய்யும்படி உத்தரவுகளை பிறப்பித்தது.

நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் ஐகோர்ட்கள் ஒவ்வொன்றிலும் ஒரு கமிட்டியை அமைக்கவும் உத்தரவிட்டது. இதேபோன்று சராசரியாக நாள் ஒன்றுக்கு கோர்ட்களுக்கு எத்தனை பேர் வருகின்றனர் என எண்ணிக்கையை கவனித்தும், போதிய தனி கழிவறைகள் கட்டப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன என உறுதி செய்து, அதற்கான நிதியொதுக்குவது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு விரிவான திட்டம் வகுக்கும்படியும் கமிட்டிக்கு உத்தரவிட்டது.

4 மாதங்களில் அதுபற்றிய ஒப்புதல் அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொண்டது. இந்நிலையில், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், கல்கத்தா, டெல்லி மற்றும் பாட்னா ஐகோர்ட்களே, இதுபற்றி எடுத்த நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து உள்ளன. நாட்டில் மொத்தம் 25 ஐகோர்ட்கள் உள்ளன. மீதமுள்ள 20 ஐகோர்ட்கள் உத்தரவுக்கேற்ப நடந்து கொள்ளவில்லை.

இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தபோது, இதற்காக வேதனை தெரிவித்தனர். இந்தியாவின் அனைத்து கோர்ட் வளாகங்களிலும் மற்றும் தீர்ப்பாயங்களிலும் கழிவறை வசதிகள் உள்ளன என உறுதி செய்யப்பட வேண்டும் என கூறி அதுபற்றிய ஒப்புதல் அறிக்கையை சமர்ப்பிக்க 8 வார கால அவகாசமும் அளித்துள்ளது. அப்படி, அடுத்த 8 வாரங்களில் அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என கடுமையாக குறிப்பிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து