முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை

புதன்கிழமை, 16 ஜூலை 2025      உலகம்
Mark-Rutte-2025-07-16

வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார்.

அமெரிக்க செனட்டர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, “ சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்த வேண்டும். பேச்சுவார்த்தையை தீவிரமாக எடுத்துக்கொள்ளாத ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கினால், உங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த மூன்று நாடுகளும் இதனை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வரிகள் உங்களை மிகவும் கடுமையாக பாதிக்கும்.

எனவே இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் விளாடிமிர் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லுங்கள். இல்லையெனில் பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது மிகப்பெரிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என்றார்

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உக்ரைனுக்கு புதிய ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்தார். மேலும், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார். அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கும் திட்டமும் உள்ளது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து