Idhayam Matrimony

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக விருந்தோம்பல் சேவையை சிறப்பாக நடத்த வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      தமிழகம்
Rajendharan-2024-12-20

Source: provided

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரனின் தலைமையில் இன்று (நேற்று) சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் சுற்றுலா குறித்து மண்டல மேலாளர்கள், மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, பொறியாளர் பிரிவின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு பணிகளின்  தற்போதைய நிலை குறித்து கேட்டு அறிந்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தினார். மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, விருந்தோம்பல் சேவையை மேலும் சிறப்பாக நடத்த வேண்டுமென்று மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், சுற்றுலா இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிருஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ச. கவிதா, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொறியாளர், மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து