எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தை வருகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.” என தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் தலைமையில்...
இதுகுறித்து தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று (18-07-2025) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.
மாற்றாந்தாய் மனப்பான்மை...
தி.மு.க. சார்பில், எதிர்வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களிடையே திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான முதல்வர் கடந்த 24.5.2025 அன்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்திய “காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம்”, “மத்திய அரசின் திட்டங்களுக்கு, அனைவருக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுதல்”, “மும்மொழிக் கொள்கையைத் திணித்து, பின்னர் மகாராஷ்டிரா மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்து பின்வாங்கினாலும், அது பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதால் எஸ்.எஸ்.ஏ. நிதியை அளித்து, தமிழ்நாட்டுக்கு எஸ்.எஸ்.ஏ. நிதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மறுப்பது”, “மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 விழுக்காடு வரிப் பகிர்வு”, “15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி தர வேண்டிய 41 விழுக்காடு வரி வருவாய் பங்கிற்குப் பதிலாக 33.16 விழுக்காடு பங்கு மட்டுமே அளித்து மாநிலங்களுக்கு இழைக்கப்படும் நிதி அநீதி”, “மத்திய அரசும் - மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி” ஆகியவை பாராளுமன்றத்தில் அழுத்தமாக எடுத்துரைக்கப்படும்.
நிதியளிக்காமல் வஞ்சிப்பது....
தமிழர்களின் தனித்துவமிக்க பண்பாட்டை அறிவியல்பூர்வமாக நிரூபித்த இரும்பின் தொன்மை குறித்து மத்திய அரசு மவுனம் காப்பது, கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, தமிழ்நாட்டிற்குரிய ரயில் திட்டங்களுக்கு நிதியளிக்காமல் வஞ்சிப்பது, உழைக்கும் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதியை முறையாக வழங்காமல் தாமதிப்பது, மாநிலத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான நிதியுரிமையைப் பறிப்பது எனத் தமிழ்நாடு தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து, நமக்கான உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும்.
தமிழ்நாடு மீனவர்கள்....
ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கொடுக்காமல் தட்டிக்கழிப்பது, வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கோடிக்கணக்கானவர்களின் வாக்குரிமையைப் பறித்து ஜனநாயகத்தின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றும் நோக்கில் தன்னாட்சிப் பெற்ற தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவது, தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது, ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் இரயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் எழுப்பப்படும்.
இரு அவைகளிலும்...
தமிழ்நாட்டின் நிதியுரிமை - மொழியுரிமை - கல்வியுரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமை உள்ளிட்ட அனைத்திற்காகவும் வருகின்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள் உரக்க குரல் எழுப்பும். கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து, தமிழர்களுக்கு எதிரான பண்பாட்டு ஊடுருவலை நிகழ்த்தும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, பாராளுமன்ற இரு அவைகளிலும் கழக உறுப்பினர்கள் உறுதியாகவும் ஒருங்கிணைந்தும் வெளிப்படுத்துவார்கள் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


