முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2025      இந்தியா
Siddaramaiah 2023 04 16

பெங்களூரு, ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணை அறிக்கை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிப்போம் என்று தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் சித்தராமையா, தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். 2025 சீசனில் ஆர்.சி.பி. அணி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருடத்திற்குப் பிறகு கோப்பையை வென்றதால் வெற்றி கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. கடந்த மாதம் 4-ம் தேதி வெற்றி கொண்டாட விழாவில் கலந்து கொள்ள லட்சகணக்கான ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

கூட்டல் நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் இரண்டு பகுதிகளான அறிக்கையை கடந்த 11ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த அறிக்கை நேற்று முன்தினம் நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சுருக்கம் அனைத்து அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அறிக்கை குறித்து இதுவரை அமைச்சரவையில் விவாதிக்கப்டவில்லை. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதிப்போம். மீடியாக்கள் குறிப்பிட்ட சில விசயங்களை பதிவு செய்துள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் அது குறித்து பேசுவேன். சிறப்பு விசாரணைக் குழு தேவை என்றால், அது அமைக்கப்படும். அது காவல்துறையின் அறிக்கையை சார்ந்தது. 

தனிநபர் (சுமார் 100 உடல்களை புதைக்கப்பட்டதை பார்த்ததாக கூறும் முன்னாள் தூய்மை பணியாளர்) 10 வருடங்களாக தலைமறைவாக இருந்த அவர், இப்போது காவல்துறை முன் வாக்குமூலம் அளித்து, தனக்கு வேண்டியதை சொல்லிவிட்டார். இறந்த உடல்களை அடக்கம் செய்ததில் தானும் ஒருவர் என்றும், அவை புதைக்கப்பட்ட இடத்தைக் காண்பிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஓரிரு நாட்களில் போலீசார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என கார்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து