முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்

சனிக்கிழமை, 19 ஜூலை 2025      விளையாட்டு
Rudraaj-Gaikwat 2024-04-20

Source: provided

லண்டன் : கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்... 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரில் யோர்க்‌ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

முக்கியத்துவம்...

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக யோர்க்‌ஷைர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அந்தோனி மெக்ராத் கூறியதாவது: துரதிருஷ்டவசமாக, தனிப்பட்ட காரணங்களினால் யோர்க்‌ஷைர் அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

ஏமாற்றம்...

வருகிற ஜூலை 22 ஆம் தேதி நடைபெறும் போட்டி மற்றும் இந்த தொடரின் மீதமுள்ள போட்டிகளிலும் அவர் இடம்பெறமாட்டார். அவர் அணியில் விளையாட முடியாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அவருக்கு மாற்று வீரரை தேர்ந்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், நேரம் மிகவும் குறைவாக இருப்பது அழுத்தத்தைக் கொடுக்கிறது. இதற்கு மேல் நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.

பாதியில்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். முழங்கை காயம் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரின் நடுவிலேயே விலகியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து