Idhayam Matrimony

கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      தமிழகம்
Thangam 2025-07-20

Source: provided

மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து  அனைவருக்கும் தெரியும் வகையில்  தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தொல்லியல் கழகம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் தொல்லியல் கழகத்தின் 33-வது ஆண்டுக் கருத்தரங்கம், 35-வது ஆவணம் இதழ் மற்றும் கல்வெட்டு அறிஞர் ராசகோபால் பவளவிழா மலர் திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா மதுரை காமராஜர் சாலையிலுள்ள தனியார் மஹாலில் நடந்தது. நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று திசையாயிரம் நூலை வெளியிட்டார்.

விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:  4 ஆண்டுகளில் இத்துறையில் மாபெறும் மறுமலர்ச்சி உருவாகியிருக்கிறது. அந்த மறுமலர்ச்சி அரசாங்கம் மேற்கொண்டு இருக்கக்கூடிய அகழாய்வு அருங்காட்சியத்தால் மட்டுமே உருவாகியதாக கருதிடமாட்டேன். தொல்லியல்துறை மீதான ஆர்வம், புதிய வடிவமைப்புகளை வெளியில் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம், அதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சி ஆகியவை இளைய சமுதாயத்திடம் ஏற்பட்டிருக்கிறது.

அகழாய்வுக்கென ஓராண்டுக்கு ரூ. 5 கோடி கொடுத்துக் கொண்டு வந்தோம். தற்போது, ரூ.7 கோடி கொடுக்க முயற்சி எடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் அனைவருக்கும் தெரியும் வகையில் ரூ.30 கோடி செலவில் தேசிய கருத்தரங்கள் தமிழ்நாட்டில் மிக விரைவில் நடத்த இருக்கிறோம்.   இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து