Idhayam Matrimony

3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      இந்தியா
Cong 2024-04-21

Source: provided

புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கவுரவ் கோகாய், "இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டுக்கு உரையாற்றுவார் என்பதில் எங்களுக்கு முன்பை விட அதிக நம்பிக்கை உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்.

ஒன்று, பஹல்காம், துணைநிலை ஆளுநர் இது குறித்து கூறிய விஷயங்கள். நிறைய நேரம் கடந்துவிட்டது, அரசாங்கம் அதன் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.  இரண்டாவதாக, வாக்களிக்கும் உரிமை குறித்து இன்று முக்கியமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அரசியல் கட்சிகளுடன் பேசுவதை தேர்தல் ஆணையம் தவிர்க்கிறது. அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கேள்விகளுக்கு அது விளக்கம் அளிப்பதில்லை. தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் அவையில் முன்வைப்பது அவரது கடமையாகும்.

மூன்றாவது விஷயம்  சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான நமது எல்லையில் உருவாகியுள்ள புதிய நிலை பற்றியது அது. எனவே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றி நாம் பேசுவது மிகவும் முக்கியம். எனவே, பிரதமர் மோடி அவைக்கு வந்து இந்த மூன்று விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களை முன்வைப்பது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து