Idhayam Matrimony

ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      விளையாட்டு
Eng 2025-07-13

Source: provided

லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.

மகளிர் அணி...

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

143 ரன்கள்...

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் நேற்று முன்தினம் (ஜூலை 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மழை காரணமாக போட்டி 29 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 42 ரன்களும், தீப்தி சர்மா 30* ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், எம் அர்லாட் மற்றும் லின்ஸி ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து வெற்றி...

இந்திய அணி 143 ரன்கள் எடுக்க, இங்கிலாந்துக்கு 144 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், மழை காரணமாக ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக எமி ஜோன்ஸ் 57 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். டம்மி பீமௌண்ட் 34 ரன்களும், நாட் ஷிவர் பிரண்ட் 21 ரன்களும் எடுத்தனர். 

தொடர் சமன்...

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 22) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து