Idhayam Matrimony

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      இந்தியா
PM-Modi-2025-07-21

புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று (ஜூலை 21) தொடங்கியது. ஆகஸ்ட் 21-ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு இந்த கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அதன் வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாடு ஒற்றுமையைக் கண்டது. நாடாளுமன்றத்தில் உள்ள தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்.

இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் வெற்றியைக் கொண்டாடுகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் ராணுவ வலிமையை முழு உலகமும் கண்டிருக்கிறது. ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கர அமைப்புகளின் தலைவர்களின் வீடுகள் 22 நிமிடங்களில் தரைமட்டமாக்கப்பட்டன.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை நான் சந்திக்கும்போதெல்லாம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை நான் கவனிக்கிறேன். இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பியுள்ளார். இது இந்திய விண்வெளித் திறன்களின் அடையாளமாகவும் தேசிய பெருமையின் அடையாளமாகவும் மாறி இருக்கிறது" என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து