Idhayam Matrimony

எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      இந்தியா      அரசியல்
Rahul 2024-06-28

புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. மக்களவையும், மாநிலங்களவையும் காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில் பல்வேறு விவகாரங்களை முன்நிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

அதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பாதுகாப்புதுறை மந்திரியை பேச அனுமதிக்கிறார்கள். நான் எதிர்க்கட்சித் தலைவர். அவையில் பேசுவது என்னுடைய உரிமை. ஆனால், என்னை பேச விடாமல் தடுக்கிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதித்தால் தானே விவாதம் நடைபெறும்.

மக்களவையில் பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.களுக்கு மட்டும் பேச அனுமதி அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இது ஒரு புதிய அணுகுமுறை. அரசு தரப்பில் உள்ளவர்கள் பேச முடிந்தால், எங்களுக்கும் பேச இடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து