Idhayam Matrimony

வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு: தமிழர் உள்பட 2 பேர் பலி

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      இந்தியா
Vaishnavi-Devi 2025-07-21

Source: provided

கத்ரா : ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குதிரை சவாரி மூலம் யாத்திரை செல்லும் வழியான குல்சான் கா லங்கர் அருகே உள்ள பங்காங்கா பகுதியில் நேற்று காலை 8.30 மணிக்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த குப்பன், 70, அவரது மனைவி ராதா, 66, ஆகியோர் உள்பட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், குப்பன் உள்பட இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மண் மற்றும் கற்களை உடனடியாக அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக நேற்று மதியம் 1 மணி வரையில் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து