Idhayam Matrimony

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ், அர்ஷ்தீப் விலகல்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      விளையாட்டு
Nitesh-Kumar 2024-09-02

Source: provided

மான்செஸ்டர் : காயம் காரணமாக  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளனர்.

4வது டெஸ்ட்... 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (ஜூலை 23) தொடங்குகிறது.

முழங்காலில் காயம்... 

இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி, உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொண்டபோது காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகுகிறார்.

விலகல்...

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங், நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு தயாராக இருக்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சு பயிற்சியின்போது, அவரது இடது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் நிதீஷ் குமார் ரெட்டி விலகுகிறார். தாயகம் திரும்பவுள்ள அவர் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறோம். பந்துவீச்சு பயிற்சியின்போது, வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ. மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்ஷுல் கம்போஜ்... 

காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார். நான்காவது டெஸ்ட்டில் அர்ஷ்தீப் சிங் விளையாட முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து