Idhayam Matrimony

ஜப்பான்: பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      உலகம்
Japan 2025-07-22

Source: provided

டோக்கியோ : ஐப்பானில் நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்துள்ளது.

ஜப்பானில் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இதற்கிடையே நாடாளுமன்றத்தின் மேல்சபை தேர்தல் நடந்து முடிந்தது. மேல்சபையை பொறுத்தவரை எளிய பெரும்பான்மை பெற 125 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் ஆளுங்கட்சிக்கு ஏற்கனவே 75 இடங்கள் இருந்தன. எனவே இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற மேலும் 50 இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழல் இருந்தது. 

ஆனால் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு 47 இடங்களே கிடைத்தன. இதனால் ஆளுங்கட்சி இரு அவைகளிலும் தனிப்பெரும்பான்மையை இழந்தது. இது ஆளுங்கட்சிக்கு விழுந்த மற்றொரு அடியாகும். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தின் கீழ்சபை தேர்தலிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியடைந்தது.

1955-ம் ஆண்டு கட்சி தொடங்கியதில் இருந்து லிபரல் டெமாக்ரடிக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்த தொடர் தோல்விகள் ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்துள்ளது. எனினும் அமெரிக்க வரி அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் தான் பதவி விலக போவதில்லை எனவும், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தலைமை பொறுப்பை ஏற்று நாட்டுக்காக தொடர்ந்து உழைப்பேன் எனவும் பிரதமர் ஷிகெரு இஷிபா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து