Idhayam Matrimony

மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

மான்செஸ்டர் : மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியுடனான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்தது உலகம் முழுவதும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

முதன்மையாக...

உலக அளவில் கால்பந்து விளையாட்டு பிரபலமாக இருந்தாலும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிதான் முதன்மையானதாக இருக்கிறது. பல கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து ரசிகர்களாக இருப்பதால் இந்த நிகழ்வு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி போட்டியில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23) தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.

சீருடைகள்...

இந்தச் சந்திப்பில் இந்திய வீரர்கள் மான்செஸ்டர் யுனைடெட் சீருடைகளை அணிந்தும் யுனைடெட் வீரர்கள் இந்திய அணியின் சீருடைகளையும் அணிந்து கொண்டார்கள். இந்தப் புகைப்படங்கள் இந்திய கால்பந்து, கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய சுழல்பந்து வீரர் குல்தீப் யாதவ் மிகவும் ஆர்வமாக கேள்விகளை கேட்டு வந்தார்.

சிராஜ் மகிழ்ச்சி...

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் 3-4-3 என்ற யுக்தியில் விளையாடுவீர்களா என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டதாகவும் பல ஆண்டுகளாக கால்பந்தை கவனித்து வருவதாகவும் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். குறிப்பாக சிராஜ் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவரது முன்மாதிரியான ரொனால்டோ அந்த அணியில் சில காலம் விளையாடியுள்ளார். முகமது சிராஜ் விக்கெட் எடுத்தால் ரொனால்டோ பாணியில் கொண்டாடுவது புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து