Idhayam Matrimony

ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 2-வது நாளாக போராட்டம்

புதன்கிழமை, 23 ஜூலை 2025      இந்தியா
Parliment-2025-07-22

Source: provided

புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

நிகழாண்டு நடைபெறும் பீகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.

சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, திமுகவின் கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பதாகைகள் ஏந்தி எம்பிக்கள் முழக்கமிட்டதால் பாராளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பாராளுமன்ற அலுவல்கள் முடங்கி, செவ்வாய்க்கிழமை முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து