எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜீவ் சுக்லா பங்கேற்பு...
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 24) வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசியக் கோப்பை தொடர் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலைச் சேர்ந்த 25 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பி.சி.சி.ஐ. துணைப் பொதுச் செயலர் ராஜீவ் சுக்லா கலந்துகொண்டார்.
அமீரகத்தில்...
இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் போரை தொடர்ந்து இந்திய அணி, பாகிஸ்தானுடன் எந்தப் போட்டியிலும் விளையாடாது எனத் தெரிவித்திருந்தது. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி விளையாடாமல், இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இந்தத் தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆசியக் கோப்பை...
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாகவும் இந்தப் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தத் தொடரில் விளையாடவுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


