எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஜெய்ஸ்வால் 58...
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்தது. கே.எல். ராகுல் 46 ரன்கள் எடுத்த நிலையிலும் ஜெய்ஸ்வால் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்சன் அசத்தல்...
அடுத்து வந்த சுப்மன் கில் 12, சாய் சுதர்சன் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ரிஷப் பண்ட் அதிரடி...
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஷர்துல் தாகூர் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். தாகூர் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் காலில் அடிப்பட்ட வெளியேறிய ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்கினார். அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். நிதானமாக விளையாடி கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் 27 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த காமோஜ் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக பும்ரா 4 ரன்னில் வெளியேறினார்.
358 ரன் குவிப்பு...
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


