Idhayam Matrimony

மகளிர் செஸ் உலக கோப்பை: இறுதி போட்டியில் திவ்யா

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      விளையாட்டு
Chess 2023-10-15

Source: provided

படுமி: மகளிர் செஸ் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய வீராங்கனை  திவ்யா வரலாறு படைத்தார்.

இறுதி போட்டிக்கு... 

பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா முன்னேறினார்.

முதல் வீராங்கனை...

இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். மேலும், இதன் மூலம் கேன்டிடேட்ஸ் தொடருக்கும் திவ்யா தேர்வாகி உள்ளார். மற்றொரு அரையிறுதி போட்டியில் கோனேரு ஹம்பி, சீனாவின் டிங்ஜி லீயுடன் மோதினார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஹம்பி இப்போது டை-பிரேக்கரில் டிங்ஜி லீயை எதிர்கொள்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து