Idhayam Matrimony

தேசிய கல்வி கொள்கை குறித்து பார்லி.யில் மத்திய அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, கல்வியின் மீதான மாநில உரிமைகளை பறிப்பதற்கு தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந் தேதி தொடங்கிய பாராளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை. இந்த பாராளுமன்ற முடக்கம் நேற்றும் 5-வது நாளாக நீடித்தது.

இதற்கிடையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, 'மாநில கல்வி உரிமைகளை பறிப்பதற்காக தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளதா?' என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய கல்வித்துறை மந்திரி சுகந்தா மஜும்தார் அளித்துள்ள பதில் வருமாறு:-

 கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் தரமான கல்வியை அளிப்பதில் முறையே மத்திய, மாநில அரசுகளுக்கு சரிவிகித பொறுப்பு உள்ளது. புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்க மொழியை ஒரு தடையாக வைத்திராமல் செயல்பட இது உதுவும். கல்வியின் மீதான மாநில உரிமைகளை பறிப்பதற்கு தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்படவில்லை.

மத்திய, மாநில அளவிலான முறையான கண்காணிப்பும் ஒருங்கிணைந்த செயல்பாடும் மட்டுமே இன்றியமையாதது. இக்கொள்கையை பற்றி விழிப்புணர்வை அளிக்கவும், மேலும் புதுமையான அம்சங்களைப் பற்றி ஆலோசிக்கவும் பயிற்சி வகுப்புகள், கருத்துப்பகிர்வை உறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அதுசார்ந்த கல்வி அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பதிலளித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து