எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மான்செஸ்டர் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
4-வது டெஸ்ட்...
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சிறப்பான தொடக்கம்...
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி - பென் டக்கட் சிறப்பாக ஆடினர். வலுவான அஸ்திவாரம் போட்ட இவர்கள் 166 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். ஜாக் கிராவ்லி 84 ரன்களில், ஜடேஜாவின் சுழலில் கேட்ச் ஆனார். பென் டக்கட் 94 ரன்களில் (100 பந்து, 13 பவுண்டரி) அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் சிக்கினார். இது அவரது முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது. 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் அடித்திருந்தது.
3-வது வீரர்...
தொடர்ந்து ஜோ ரூட் மற்றும் போப் பேட்டிங் செய்தனர். இதில் ஜோ ரூட் 31 ரன்கள் அடித்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை 13,290 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்:
1. சச்சின் தெண்டுல்கர் - 15,921 ரன்கள்
2. ரிக்கி பாண்டிங் - 13,378 ரன்கள்
3. ஜோ ரூட் - 13,290* ரன்கள்
4. ஜாக் காலிஸ் - 13,289 ரன்கள்
5. ராகுல் டிராவிட் - 13,288 ரன்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


