Idhayam Matrimony

சிறுமி பாலியல் வழக்கில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      தமிழகம்
Jail 2024-10-04

திருவள்ளூர், திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா கவரைபேட்டை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி  கடந்த 12-ந்தேதி  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞரை, ஆந்திராவின் சூலூர்பேட்டை ரெயில்நிலையம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரிடம் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் கூறுகையில், "சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தேடப்படும் நபரின் அடையாளங்கள், கைதாகியுள்ள இளைஞருடன் ஒத்துப்போகிறது. முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞர் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்படி ஐஜி, டிஎஸ்பி, காவல் துறையினர் நடத்திய விசாரணையின் போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைதான நபர்தான் தன்னை வன்கொடுமை செய்தவர் என சிறுமியும் உறுதிப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து