Idhayam Matrimony

டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      தமிழகம்
Stalin 2024-12-04

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது குறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் ரேசன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு டிராக்டரில், வெற்றிமாலை கண்மாய் கரையருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கண்மாய் கரையில் உள்ள சாலையில் இருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பொன்னம்மாள் (68) ராக்கி (62), முனியம்மாள் (55) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து