முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் கட்டிடக்கலை மாட்சியை புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள்: அரசு பெருமிதம்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டிடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை தமிழ்நாட்டின் வளம் பெருக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும்-வரலாற்றுச் சிறப்புமிக்க கலைச் சின்னங்களை உருவாக்கும் பெருமைக்குரிய துறையாகும்.

2021 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓர் ஆண்டு காலத்தில் சென்னை கிண்டியில் ரூ. 240.53 கோடியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை 6 தளங்களுடன் கட்டி 15.6.2023 அன்று திறந்து வைத்தார். கொளத்தூர் தொகுதியில்  மொத்தம் 210 கோடியே 80 லட்சம் ருபாய் செலவில் 6 அடுக்குத் தளங்களில் 560 படுக்கை வசதிகளுடன் 6 அறுவை சிகிச்சை அரங்கம்- நவீன ரத்த வங்கி- புற்று நோயியல் பிரிவு- குழந்தைகள் நலப்பிரிவு- நரம்பியல் பிரிவு- மகப்பேறு பிரிவு என்று நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அனைத்து வசதிகளோடும் மிகப் பிரம்மாண்டமாக உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

அரியலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாகை, நாமக்கல், உதகை, ராமநாதபுரம், திருப்பூர், விருதுநகர், திருவள்ளூர், ஆகிய 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குத் தேவையான கட்டிடங்கள் ரூ. 4179 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் ரூ. 218 கோடியில் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவாக திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் கடல் நடுவில் நாட்டிலேயே முதலாவதாக ரூ. 37 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான கண்ணாடி இழைப் பாலத்தினைக் கட்டி, 30.12.2024 அன்று திறந்து வைத்தார்.

முதல்வரால் இவை மட்டுமல்லாமல், மேலும் பல புதிய கட்டமைப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

* புதுடெல்லி சாணக்கியபுரியில் ரூ. 257 கோடியில் புதிதாகக் கட்டப்படவுள்ள வைகை தமிழ்நாடு இல்லக் கட்டிடங்கள்.

* கோவை மாநகரில் கட்டப்படும் ரூ. 300 கோடி மதிப்பிலான தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்.

* திருச்சி மாநகரில் கட்டப்படும் ரூ. 290 கோடி மதிப்பீட்டிலான மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்.

* செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு கிராமத்தில் ரூ. 525 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் முதலிய பொதுமக்கள் பெரிதும் பயன் பெறும் பல்வேறு உயர் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து