முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தபடுகின்றன: சுப்ரீம்கோர்ட் அதிருப்தி

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடில்லி, ''சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

பெண் அரசியல்வாதி ஒருவரை விமர்சித்து யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கேரளா பத்திரிகையாளருக்கு எதிராக சுப்ரீம்கோர்ட் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நேற்று (ஜூலை 25) நீதிபதிகள் நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் அரசியல்வாதி ஒருவரை விமர்சித்து யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கேரள பத்திரிகையாளருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 

மேலும், நீதிபதிகள் கூறியதாவது: யூடியூப் வீடியோக்கள் நீதிமன்ற செயல்முறைக்கு மாற்றாக இருக்க முடியாது. தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றங்கள் உள்ளன. யூடியூப் வீடியோ மூலம் கருத்தை திணிக்க முடியாது.  யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் பேசப்படும் எதிர்மறையான விஷயங்கள்  ஈர்க்கின்றன. ஊழல் எதிர்ப்பு பெயரில் யாருடைய புகழையும் பாதிக்கும் வகையில் செயல்பட முடியாது. விமர்சிப்பது சட்டத்தின் கண்ணோட்டத்தில் தவறானது. ஊழலை எதிர்ப்பதாக கூறி அவதூறு கருத்து பரப்ப சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து