Idhayam Matrimony

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      தமிழகம்
Modi-4 2025-07-27

Source: provided

அரியலூர் : கங்​கை​கொண்ட சோழபுரம் முப்பெரும் விழாவில் இளையராஜாவின் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி ரசித்துப் பார்த்தார்.

அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில், மத்​திய கலா​ச்சா​ரத் துறை சார்​பில்  முப்​பெரும் விழா நடை​பெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கோயில் வளாகத்​தில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தேவார திருவாசக பதிகங்களை ஓதுவார்கள் பாடினர். 

இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலில் ‘நான் கடவுள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஓம் சிவோஹம்’ பாடல் இசைக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கைகளால் தாளமிட்டப்படி ரசித்து பார்த்தார். பின்னர் தான் இசையமைத்த திருவாசகம் ஆல்பத்தில் இடம்பெற்ற மாசற்ற ஜோதி பாடலை இளையராஜா பாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து