முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      தமிழகம்
Manimaran 2025-07-27

Source: provided

புதுடில்லி : ''ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது,'' என்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

மன் கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:  சமீபத்தில் விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா பாதுகாப்பாக பூமி திரும்பிய போது முழு தேசமும் மகிழ்ச்சியாலும், பெருமையாலும் நிறைந்தது.  

மஹாராஷ்டிராவில் 12 கோட்டைகளை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இந்த கோட்டைகள் நமது சுயமரியாதையை வெளிப்படுத்துகின்றன.  தஞ்சாவூரை சேர்ந்த மணி மாறன் தமிழ் ஓலைச்சுவடிகளை படித்து புரிந்து கொள்ளும் முறையை கற்றுக்கொடுத்தார். இதனால் இன்று பல மாணவர்கள் இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது  பண்டைய காலத்து பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். பின்னர் ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும்.

அங்கு உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் அறிவியல் மரபுகள் கற்றுக்கொள்ள முடியும்.  இவை வெறும் கையெழுத்துப் பிரதிகள் அல்ல, இவை இந்தியாவின் அத்தியாயங்கள், நாம் வரும் தலைமுறையினருக்கு வழங்க வேண்டும்.

போபாலில் உள்ள 200 பெண்கள் நகரத்தில் உள்ள 17 பூங்காக்களை சுத்தம் செய்து துணி பைகளை விநியோகம் செய்துள்ளர். ஒவ்வொரு நாளும் நாம் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கும்போது தான் நாடு சுத்தமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து