முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு முதல்வர் ஆகும் தகுதி இல்லையா? திருமாவளவன் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2025      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

Source: provided

ராணிப்பேட்டை : 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன்.  நான் முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்து மதத்தை மட்டும் நீங்கள் விமர்சிப்பதாக கேட்கிறார்கள். அது சகோதரத்துவமாக இல்லை என்பதுதான் பிரச்சனை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இதை ஏன் சுய விமர்சனமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் நம் கேள்வி. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க. என அனைவரும் மதச்சார்பின்மை கொள்கையில் உள்ளோம்.

எங்கள் கருத்து இந்து சமூகத்திற்கு எதிரான கருத்து இல்லை. கருத்தியலுக்கு எதிரானதுதான். எடப்பாடி.பழனிசாமி, பா.ஜ.க. வை உடன் வைத்துக்கொண்டு தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என்கிறார். நாம் மதச்சார்பின்மை காப்போம் என்கிறோம்.  எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக நான் கூறினேனா? துணை முதல்வர் பதவி தருவதாக அழைக்கின்றனர். நான் முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? நானும் ரவுடிதான் என யார் யாரோ கிளம்புகின்றனர். முதல்வர் ஆக்குங்கள் என்கின்றனர்.

நானும் 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன். கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், ராகுல் என அனைவரோடும் அரசியலில் பயணித்துள்ளேன்.  கொள்கை அரசியலில் செயல்படும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. சங்பரிவார் தமிழகத்தில் காலுன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதனால் தி.மு.க.வுடன் உறுதியாக நிற்கிறோம் பயணிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து