முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவன் தலைவி திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      சினிமா
Thalaivan-Thalaivi 2025-07-

Source: provided

விஜய் சேதுபதி-நித்யா மேனன் திருமணமாகி சில மாதங்களில் பிரிந்து விடுகிறார்கள். மூன்று மாதங்களாக பிரிந்திருக்கும் இவர்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இருந்தும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை குடும்பங்களில் அன்றாட நடக்கும் பிரச்சனைகளின் பின்னணியில், சொல்லியிருக்கும் படமே தலைவன் தலைவி. ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் அன்பான கணவராகவும், அம்மா மீது அக்கறையுள்ள பிள்ளையாகவும் வரும் விஜய் சேதுபதி, நடிப்பில்  அசத்தியுள்ளார். நித்யா மேனன் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தாலும், அவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய அளவுக்கு படத்தில் காட்சிகள் இல்லை, யோகி பாபு, வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு மழை. சரவணன் - தீபா சங்கர், செம்பன் வினோத் - ஜானகி சுரேஷ் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அருமை. எழுதி இயக்கியிருக்கும் பாண்டிராஜ், வழக்கமான குடும்ப சிக்கல்களை குட்டி அறிவுறையோடு, நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும், அதை அழுத்தமாக சொல்லாதது படத்திற்கு சற்று பலவீனமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து