எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஒகேனக்கல் : கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விட்ட நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1.25 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், கபினி அணையும் நிரம்பி விட்டன.
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 794 கன அடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர், கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் இருக்கரை யும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் காலை 1 லட்சத்து 05 ஆயிரம் கனஅடி வந்தது. பின்னர் படிபடியாக நீர்வரத்து உயர்ந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.
நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரில் முழ்கின. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகளவு திறக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


