முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது : மத்திய அமைச்சர் பிரதான் தகவல்

புதன்கிழமை, 30 ஜூலை 2025      இந்தியா
Dharmendra Pradhan 2023 06 21

Source: provided

புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு திரிபவர்கள்தான் (ராகுல் காந்தி) அரசியலமைப்புச் சட்டத்தை கேலி செய்கிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை. இதை தேர்தல் ஆணையம் பல பத்தாண்டுகளாக செய்து வருகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். இதில் அவர்களின் சொந்த நலன் அடங்கி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு கண்டிக்கத்தக்கது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோருவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு எதிராக விவாதிப்பதற்கான அழைப்பு. தேர்தல் ஆணையத்துக்கு எதிரான விவாதத்தை மக்களவையால் தொடங்க முடியுமா? அரசியலமைப்பின் அமைப்பு முறையை புரிந்து கொள்ளாதவர்களிடம் விவாதிப்பதில் பயன் இல்லை என விமர்சித்தார்.

இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நேற்றும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை எழுப்பி கூச்சலிட்டனர். கேள்வி நேரம் முடிந்த உடன் உங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என கூறி சபாநாயகர் சமாதானப்படுத்தியதை அடுத்து அவர்கள் அமைதி அடைந்தனர். 

பாராளுமன்றத்துக்கு வெளியே நேற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து