Idhayam Matrimony

உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வரை நேரில் சந்தித்தேன் தே.மு.தி.க. பிரேமலதா பேட்டி

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      தமிழகம்
DMDK-2025-07-31

Source: provided

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

100 சதவீதம் மரியாதை நிமித்தமாகவும், உடல்நிலை குறித்து விசாரிக்கவுமோ முதல்வரை சந்தித்தேன். கலைஞருக்கும், கேப்டனுக்கும் இடையேயான பழக்கம் நெடுங்காலமாக இருந்தது. குடும்பம், நட்பு ரீதியாக அவரின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளதால் தான் முதலமைச்சரை சந்தித்து உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தேன். முதல்வர் மு.க.ஸ்டாலினை கேப்டன் சார்பாகவும் தே.மு.தி.க. சார்பாகவும் சந்தித்து நலம் விசாரித்தேன்.

தே.மு.தி.க.வை பலப்படுத்தும் பணியில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறோம். ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் தே.மு.தி.க.வின் சுற்றுப்பயணம் தொடங்கும். கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்போம். 2026 ஜன.9-ல் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாடு மற்றும் கட்சியை வலுப்படுத்துவதே தற்போதைய நோக்கம். யாருடன் யார் கூட்டணி என தற்போது கூற முடியாது. இன்னும் நேரம் உள்ளதால் சரியான நேரத்தில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து