முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகப்பணிகள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      தமிழகம்
EVa-Velu 2023 04 02

Source: provided

சென்னை: திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, சென்னை, தலைமை செயலகத்தில், பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று (31.07.2025) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருநெல்வேலி மாவட்டம், பொருநை அருங்காட்சியகப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். "வீரம் விளைந்த திருநெல்வேலி நகரத்தை ஒட்டி பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்-அமைச்சரால், 18.5.2023 அன்று அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அதில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலமாக கிடைத்தப் அரியப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.

கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் 106 முதுமக்கள் தாழிகள் அகழாய்வு மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு ரூ.33 கோடி மதிப்பீட்டில், 13 ஏக்கர் பரப்பளவில், 54,000 சதுர அடி கொண்ட 7 பகுதியாக கட்டப்பட்டுள்ளது.

பொருநையில் கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில், சிவகளைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த ஓர் கட்டிடமும், ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த 2 கட்டிடமும், கொற்கைப் பகுதியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட அரியப் பொருட்களைக் காட்சிப்படுத்த 2 கட்டிடமும் மற்றும் சுகாதார வசதிகள் கொண்ட கட்டிடங்களும் கட்டப்பட்டது. பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மீதமுள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து