Idhayam Matrimony

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றமா? திடீரென பரவிய தகவலால் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      தமிழகம்
RN Ravi 2023-04-06

சென்னை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுவார் என்று திடீரென பரவிய தகவலால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுவார் என்று அடிக்கடி சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவுவதும் பிறகு அது வதந்தி என்று அறிவிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் நேற்று முன்தினம் முதல் சமூக வலைதளங்களில் கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுவார் என்று புதிய தகவல் பரவி வருகிறது.

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பதற்கு முன்பு 2 ஆண்டுகள் நாகலாந்து மாநிலத்தில் கவர்னராக இருந்தார். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர் கவர்னர் பதவியில் இருக்கிறார். வருகிற செப்டம்பர் மாதம் வந்தால் அவர் தொடர்ச்சியாக கவர்னர் பதவியில் இருப்பது 6 ஆண்டுகளை நிறைவு செய்தற்கு சமமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் அவர் கவர்னர் பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இதனால்தான் அவர் எந்த நேரத்திலும் மாற்றப்படுவார் என்று அடிக்கடி தகவல் பரவுகிறது. தற்போதும் அதன் அடிப்படையில்தான் தகவல் பரவி இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.கவர்னர் ஆர்.என்.ரவி துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படலாம் என்றும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதனை கவர் மாளிகை அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் சுதந்திர தினத்தன்று விருந்து தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து