முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும்? - நாசா விளக்கம்

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      உலகம்
NASA 2024-12-15

Source: provided

அமெரிக்கா : உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இதற்கு நாசா மறுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக இன்று உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வு என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு நாசா மறுத்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் நகர்ந்து வந்து சூரியனை முழுவதுமாக மறைக்கும்போது தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இந்த நேரத்தில் சூரியனின் வெளிச்சம் சிறிது நேரத்திற்கு பூமி மேல் விழாது. இதுவே சூரிய கிரகணம் ஆகும். 2025-ம் ஆண்டின் அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21-ந்தேதி நிகழ உள்ளது. ஆனாலும் அது மிகச் சிறிய சூரியகிரகணம்தான். கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு வரும் ஆகஸ்டு 2, 2027-ம் ஆண்டு நிகழ இருக்கும் சூரிய கிரகணம் தான் இந்த நூற்றாண்டில் நிகழ இருக்கும் மிக நீண்ட சூரிய கிரகணம்.

இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடி வரை நீடிக்க உள்ளது . ஆனாலும் இது பூமியை முழுவதும் இருளாக ஆக்காது. ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும். மற்ற நாடுகளில் இதை காண முடியாது. இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து