முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      தமிழகம்      அரசியல்
EPS 2023 03 27

தூத்துக்குடி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'  பிரச்சார பயண த்தின் ஒரு பகுதியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தூத்துக்குடியில்  கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.  இதில்  பேசிய எடப்பாடி கே.பழனிச்சாமி,  “அ.தி.மு.க. அரசு இருக்கும்போது, தூத்துக்குடி விமான நிலையம் அமைக்க சுமார் 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.  அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தூத்துக்குடியில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.   தொழில் தொடங்க எளிதாக அனுமதி பெறுவதற்காக ஒற்றைச் சாளர முறையை மீண்டும் கொண்டு வந்து உடனுக்குடன் அனுமதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் சீண்டல் நடப்பதற்கு போதைப் பொருள் பழக்கம் காரணமாக உள்ளது. கஞ்சா பயன்படுத்துபவர்கள் தங்களையே மறந்து தவறு செய்கிறார்கள்.  அதனை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று நீங்களும், நானும் வேண்டுகிறோம். நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நடக்காவிட்டால் அடுத்த ஆண்டு அ.தி.மு.க. அரசு அமையும்போது, நிச்சயமாக இதனை இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்று பழனிசாமி பேசினார்.

தொடர்ந்து ஆண்டு பெருவிழா நடைபெற்று வரும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்துக்கு சென்று எடப்பாடி பழனிசாமி வழிப்பட்டார். அவருக்கு தூய பனிமய மாதா படத்தை அளித்து பங்குத்தந்தை ஸ்டார்வின் ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து