Idhayam Matrimony

2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை: தமிழ்நாடு அரசு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : 2030-க்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்  தெரிவித்துள்ளார்.  

வறுமையை ஒழிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு சமூகநீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஒருங்கிணைத்து, வறுமையை வெற்றிகரமாக குறைத்து வருகிறது. அந்த வகையில் நிதி ஆயோக் அறிக்கையில் 'தமிழ்நாடு வறுமை இல்லை' என்ற இலக்கில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், வறுமை ஒழிப்பில் தேசிய சராசரி மதிப்பெண் 100-க்கு 72 என்று இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் மதிப்பெண் அதில் 92 என்ற அளவில் இருக்கிறது.

வறுமையை ஒழிப்பதில் நீடித்த வளர்ச்சி இலக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் அனைவருக்குமான பொது வினியோகத்திட்டம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், கலைஞரின் கனவு இல்லத் திட்டம் ஆகிய பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தி உள்ளது. இதுதவிர ஊக்கமளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஒருங்கிணைந்த வாழ்வாதார மேம்பாட்டு முன்னெடுப்புகள் போன்ற முன்னோடித் திட்டங்களும் வறுமை ஒழிப்புக்கு ஒரு பாலமாக இருக்கிறது.

2030-க்குள் மக்களுக்கான நீடித்த வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, சுகாதார அமைப்புகள், கல்வி அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள் போன்ற சமூக நிறுவனங்களை வலுப்படுத்தி வறுமையை அதன் அனைத்து பரிமாணங்களிலும் முழுமையாக அறவே ஒழித்து நிலையான முன்னேற்றத்தை வழங்குவதில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தன்னுடைய 'எக்ஸ்' தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து