Idhayam Matrimony

சரண்டர் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      சினிமா
Surrender

காவல் நிலையத்தில் ஒரு துப்பாக்கி மாயமாகிறது. 4 நாட்களுக்குள் அந்த துப்பாக்கியை கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் எஸ்.ஐ தர்ஷனுக்கு, ரவுடி சுஜித் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும், காணாமல் போன துப்பாக்கியையும் கண்டுபிடித்தாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைகளை அவர் எப்படி சமாளித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார் என்பதை பரபரப்பாக சொல்வதே ‘சரண்டர்’ படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் நடிப்பிலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும், உணர்வுப்பூர்வமாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். தலைமை காவலராக நடித்திருக்கும் லால், தனது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சுஜித், ரவுடி கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். விகாஷ் படிஷாவின் பின்னணி இசை படத்தின் பரபரப்பையும், விறுவிறுப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. எழுதி இயக்கியிருக்கும் கவுதமன் கணபதி, சாதாரணமான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு, பரபரப்பான திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம், முழுமையான ஆக்‌ஷன் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், ‘சரண்டர்’ சமரசமில்லாதது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து