Idhayam Matrimony

ஓ.டி.பி. விவகாரம்: தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, ஓ.டி.பி. விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை அணுகும் விதமாக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தி.மு.க. நடத்தி வருகிறது. இதில், பொதுமக்களிடம் இருந்து ஓ.டி.பி. பெற சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தரப்பில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஓ.டி.பி. பெறும் விவகாரத்தில் பொதுமக்களிடம் எந்தவித வற்புறுத்தலும் செய்யப்படவில்லை. அவர்கள்  தங்களுடைய சுய விருப்பத்தின் பேரில் தான்  கையெழுத்திட்டு வருகின்றனர் என்று கூறப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மன் மற்றும் ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ஆதார் விவரங்களை மக்களிடம் இருந்து கட்சி சேகரிக்கவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தார்.  

இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இது தொடர்பாக பேசிய நீதிபதிகள், "இந்தப் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்தது. முழு செயல்முறையும் சந்தேகத்திற்குரியது. நீதிமன்றம் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் ஐகோர்ட்டையே நாடுங்கள். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை." என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து