Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      உலகம்
Trump 2024-11-06

நியூயார்க், ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை முடித்து வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையே போர் உக்கிரமான நிலையை எட்ட இருந்த நிலையில், திடீரென இரு நாடுகளும் பரஸ்பரம் போர் நிறுத்தத்தை மேற்கொண்டன.

இந்த நிலையில் தான் முன்னின்று தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கேட்டுக்கொண்டதால் தான் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா, காங்கோ மற்றும் ருவாண்டா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையேயான மோதல்களை தான் தலையிட்டு தீர்த்து வைத்ததால், அவை நிறுத்தப்பட்டன என்று மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும் நான் நிறைய போர்களைத் தீர்த்து வைத்தேன். ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை முடித்து வைத்தேன் என்று நினைக்கிறேன். ஆனால், உங்களுக்குத் தெரியும், நாங்கள் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போர் விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீண்டும் இவ்வாறு கருத்து கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து