Idhayam Matrimony

பல்வேறு புதிய சாதனைகளை படைத்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
India

Source: provided

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது.

தொடர் சமன்...

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்ற நிலையில் ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

வரலாற்று சாதனை...

இந்த தொடரில் பெரும்பாலான இன்னிங்ஸ்களில் பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்தினர். இதன் காரணமாக இது அதிக ரன் குவிப்பு நிறைந்த டெஸ்ட் தொடராக அமைந்தது. எனவே இந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

அதிகபட்ச ரன்கள்... 

1. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது அதிகபட்ச ரன்கள் ( இரு அணிகளும் சேர்ந்து 7,187 ரன்கள்) அடிக்கப்பட்ட தொடராக இது சாதனை படைத்துள்ளது.

2. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 300+ ரன்கள் (14 முறை) அடிக்கப்பட்ட தொடர்களின் சாதனை பட்டியலில் ஆஷஸ் தொடருடன் இது முதலிடத்தில் இணைந்துள்ளது.

3. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வீரர்கள் 400+ ரன்கள் அடித்த தொடராக இது சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் 9 வீரர்கள் 400 ரன்களுக்கு மேல் அடித்தனர். 1975-76-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா மற்றும் 1993-ம் ஆண்டு இங்கிலாந்து- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் தலா 8 வீரர்கள் 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டதே இந்த வகையில் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

21 சதங்கள்... 

4. இந்த தொடரில் இந்தியா தரப்பில் 12 சதம், இங்கிலாந்து சார்பில் 9 சதம் என மொத்தம் 21 சதங்கள் பதிவாகியுள்ளன. 1955-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா தொடரில் 21 சதங்கள் நொறுக்கப்பட்டதே தொடர் ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சதம் எண்ணிக்கையாக இருக்கிறது. அச்சாதனை இப்போது சமன் செய்யப்பட்டுள்ளது.

5. இந்த தொடரில் இரு அணிகளும் சேர்ந்து 19 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப்கள் அமைத்தன. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப்கள் அமைக்கப்பட்ட தொடர்களின் சாதனை பட்டியலில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் ஆகியவற்றுடன் முதலிடத்தில் இணைந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து