Idhayam Matrimony

5 டெஸ்ட், 23 விக்கெட்டுகள்: இந்திய அணி வெற்றிக்காக ஓய்வின்றி உழைத்த சிராஜ்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
4-Ram-53

Source: provided

லண்டன்: 5 டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்ற முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

கடைசி டெஸ்ட்... 

இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஒரு போட்டி டிரா ஆனது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.

த்ரில் வெற்றி... 

இந்த போட்டியில் கடைசி நாளன நேற்று இங்கிலாந்து அணிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்தியாவுக்கு 4 விக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய சிராஜ், பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சால் 4 விக்கெட்டை வீழ்த்திய இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் சிராஜ் வென்றார்.

23 விக்கெட்டுகள்...

இந்நிலையில் இந்த தொடரில் முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் முதல் டெஸ்டில் 41 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் 2-வது டெஸ்டில் 31.3 ஓவர்கள் பந்து வீசி 7 விக்கெட்டுகளையும் 3-வது முதல் டெஸ்டில் 36.2 ஓவர்களும் 4 விக்கெட்டும், 4-வது டெஸ்டில் 30 ஓவர்களும் 1 விக்கெட்டும் 5-வது டெஸ்டில் 46.3 ஓவர்களும் 9 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 1113 பந்துகளை வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒரே வேகப்பந்து வீச்சாளர்...

இந்திய பந்து வீச்சாளர்களில் 5 போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆவார். மேலும் இங்கிலாந்து வீரர்களில் கூட எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் 5 போட்டிகளில் விளையாடவில்லை. ஒரு தொடரில் அதிக ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.

போர் வீரரைப் போல...

ஒரு வேகப்பந்து வீச்சு வீரர் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் இந்திய அணிக்காக அனைத்து போட்டியிலும் விளையாடி அணிக்கு பெருமை தேடி தந்துள்ளார். அவரை இந்திய ரசிகர்கள் உள்பட பல முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சிராஜை போர் வீரரைப் போன்றவர் என புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து