Idhayam Matrimony

கவின் படுகொலை வழக்கில் சுர்ஜித் தாய் ஆஜராக சம்மன்

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      தமிழகம்

தூத்துக்குடி, கவின் படுகொலை வழக்கில்,ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ்.  கடந்த 27ம் தேதி திருநெல்வேலி கே.டி.சி. நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்,  அவரது தந்தை  சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.  துணை காவல் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஸ் தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுர்ஜித்தின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், மேலும் சில நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கவினின் பெற்றோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், கவின் படுகொலை வழக்கில்,ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து